Sunday, August 2, 2020

தருமபுரி மாவட்டத்தில் இன்று 17பேருக்கு கரோனா 02.08.2020

தர்மபுரி மாவட்டத்தில் இன்று 17 நபர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தருமபுரி மாவட்டத்தில் இன்று  17 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.

1) 33  வயது ஆண் நெருப்பூர் பென்னாகரம் கார் தொழிற்சாலை நிறுவனர். காஞ்சிபுரம் திருப்பெரும்புதூர் சென்றுவந்துள்ளார்

2) 34 வயது ஆண் கிருஷ்ணாபுரம் பென்னாகரம் டிரைவர் பெங்களூர் சென்று வந்துள்ளார்

3) 45 வயது ஆண் குமாரசாமிபேட்டை  பெங்களூர் சென்று வந்துள்ளார்

4) 44 வயது ஆண் பந்தாரஅள்ளி, ஜக்கசமுத்திரம் டிரைவர் பெங்களூர் தூத்துக்குடி சென்று வந்துள்ளார்

5) 30 வயது ஆண் பெரியாம்பட்டி துணி வியாபாரம் தொற்று உள்ளவரின் தொடர்பில் இருந்துள்ளார்.

6) 35 வயது ஆண் மந்திரி கவுண்டர் தெரு பாலக்கோடு கிருஷ்ணகிரி சென்று வந்துள்ளார்.

7) 27 வயது ஆண் பீக்கனஅள்ளி சளி காய்ச்சல் இருந்தது.

8) 59 வயது ஆண் பிடமனேரி காளியப்ப செட்டி தெரு சளி காய்ச்சல் இருந்தது. ஆவின் பணியாளர்.

9) 25 வயது ஆண் பந்தாரஅள்ளி பெங்களூர் சென்று வந்துள்ளார்.மேஸ்திரி

10) 45 வயது ஆண் சின்ன பேளூர் பென்னாகரம் லாரி டிரைவர் பெங்களூர் சென்றுவந்துள்ளார்.

11) 32 வயது ஆண் பாலக்கோடு மேஸ்திரி பெங்களுர் சென்று வந்துள்ளார்

12) 21 வயது பெண் ஒடசல்பட்டி.பெங்களுர் சென்று வந்துள்ளார்

13) 43 வயது ஆண் திம்மனமதி திருப்பத்தூர் மாவட்டம்
தொற்று உள்ளவரின்  தொடர்பில் இருந்துள்ளார்.

14) 26 வயது ஆண் ஜெட்டிஅள்ளி பேடாரஅள்ளி மேஸ்திரி பெங்களுர் சென்று வந்துள்ளார்

15) 52 வயது ஆண் தண்டபாணி கோவில்தெரு திருப்பத்தூர் மாவட்டம் மாவட்டத்தில் இதுவரை 787 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Saturday, August 1, 2020

தமிழர் மரபு சந்தை

தருமபுரி தமிழர் மரபு சந்தை

மொரப்பூரில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் முழுமையான பால் வாங்காததால், விவசாயிகள் தன்னார்வ அமைப்பின் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக பாலை வழங்கினர்.

மொரப்பூரில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் முழுமையான பால் வாங்காததால், விவசாயிகள் தன்னார்வ அமைப்பின் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக பாலை வழங்கினர். 


தருமபுரி மாவட்டம் மொரப்பூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் காலை, மாலை இரு வேளைகளில் பால் ஊற்றி வருகின்றனர். மேலும் தினமும் மொரப்பூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் இருந்து பத்து கேன் வீதம்,  காலை, மாலை வேளையில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில் வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், கடந்த சில தினங்களாக தருமபுரி மாவட்ட ஆவின் நிர்வாகம் சார்பில் விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்யும் அளவை குறைத்துக் கொள்ள அறிவுறுத்தி உள்ளது. இதனால் விவசாயிகளிடமிருந்து லிட்டருக்கு 100 மில்லி பால்  திருப்பி அனுப்பப்படுகிறது.

தொடர்ந்து நேற்று தருமபுரி மாவட்ட ஆவின் நிர்வாகம், கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் பால் கொள்முதல் செய்வதை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதனால் தருமபுரி மாவட்டத்தில் ஒரு சில பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் செய்வது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமுடக்கத்தால் வருவாய் இன்றி பால் வாங்க கூட சிலர் தவித்து வருவதால், பாலை கீழே ஊற்றுவதால், யாருக்கும்  பயனில்லை. இதனால் மொரப்பூர் பகுதியில் உள்ள ஒரு சில விவசாயிகள், பொதுமக்களுக்கு இலவசமாக கொடுக்க முன்வந்தனர். தொடர்ந்து மொரப்பூர் பகுதியில் செயல்படும் நமது மொரப்பூர் என்ற தன்னார்வ அமைப்பின் மூலம் பேருந்து நிலையத்தில் வைத்து, இலவசமாக பாலை மொரப்பூர் காவல் ஆய்வாளர் மஞ்சுளா பொதுமக்களுக்கு வழங்கினர்.  

 இன்று 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 200 லிட்டர் பாலை வழங்கினர். இந்த பாலை தன்னார்வ அமைப்பினர் மூலம் விவசாயிகள், பொதுமக்களுக்கு வழங்கினர். மேலும் பால் இலவசமாக வழங்குவதை அறிந்த மக்கள் பாத்திரத்துடன் வந்து சமூக இடைவெளியை பின்பற்றி வரிசையில் நின்று வாங்கி செல்கின்றனர். மேலும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் விவசாயிகளிடமிருந்து பால் வாங்கும் வரை பால் இலவசமாக வழங்கப்படும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தருமபுரி போலிசாரின் மக்கள் பணி

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போச்சம்பள்ளி நகர அரிமா சங்கத்துடன் இணைந்து பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.மேலும் காவல் உதவி ஆய்வாளர் திரு.கெய்க்வாட் அவர்கள் பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முகக்கவசம், கையுறை அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

மூக்குத்தி முருகன் அறந்தாங்கி நிஷா ஆட்டம்

மூக்குத்தி முருகன் அறந்தாங்கி நிஷா ஆட்டம்  https://youtu.be/-5_zNcJcksw

தருமபுரி மாவட்டத்தில் இன்று 9 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் இன்று 9 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 770 நபர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இல் 502 பேர் குணம் பெற்று வீடு திரும்பியுள்ளனர் மருத்துவமனையில் 264 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தருமபுரியில் 9 பேருக்கு தொற்று 01.08.2020 dharmapuri news update #dharma...